மக்கள் நற்பணி கழகம் — வரலாறு

மக்கள் நற்பணி கழகம் — வரலாறு

அறிமுகம்

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் இணைந்து பணியாற்றிய எங்கள் அணியின் அனுபவம், மக்களுக்கு சிறப்பான ஒரு அரசு அமைய வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது.

2002 — டிரஸ்ட் ஆக்ட் பதிவு

“மக்கள் நற்பணி கழகம்” என்ற பெயரில் எங்கள் அமைப்பு 2002 ஆம் ஆண்டு டிரஸ்ட் ஆக்ட் படி பதிவு செய்யப்பட்டு தொண்டு நிறுவனமாக செயல்பட்டது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அரசியல் கட்சியாக உருமாற்றம்

எந்த அமைப்பும் அல்லது தலைவர்களும் மக்களின் நலனுக்காக முழுமையாக செயல்படாததால், நாங்கள் எங்கள் வாழ்நாளின் இறுதிக் காலம் வரை அரசியல் பணியில் ஈடுபட வேண்டும் என்று உறுதியான முடிவுக்கு வந்தோம்.

எங்கள் உறுதி

இன்று, மக்கள் நற்பணி கழகம் அரசியல் கட்சியாக உருமாற்றம் பெற்று, தமிழக மக்களுக்காக எங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ளது. நல்ல ஆட்சி, வெளிப்படைத் தன்மை, மற்றும் மக்கள் பங்குபற்றல் என்பவை எங்கள் அரசியல் அடித்தளம்.