இந்திய ஒருமைப்பாட்டும் அரசியலமைப்பு மரியாதையும்
இந்திய ஒருமைப்பாட்டை பேணிக்காத்து இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இயங்கி, சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல், அமைதியான, வளமான சமுதாயத்தை உருவாக்குதல்.
மக்கள் நற்பணி கழகம்
Our Vision and Mission
நீதியும் நேர்மையும் வழிகாட்டும் சமத்துவ சமூக நோக்கங்கள்
இந்திய ஒருமைப்பாட்டை பேணிக்காத்து இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இயங்கி, சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல், அமைதியான, வளமான சமுதாயத்தை உருவாக்குதல்.
சாதி, மத, இன, மொழி வேறுபாடற்ற, பிறவி வேறுபாடில்லாத, ஆதிக்கமற்ற, சகோதரத்துவ சமதர்ம சமுதாயத்தை அமைத்தல்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
பிற மொழி ஆதிக்கமில்லாமல், அந்தந்த மாநில மொழிகளின் தனித்துவத்தை பாதுகாத்தல்.
ஆளுகின்ற அரசு, மக்களின் பணத்தை — அரசின் பணத்தை — ஊதாரித்தனமாக, தான்தோன்றித்தனமாக செலவிடாமல் அனைவருக்கும் பயன்படும்படியான பயனுள்ள திட்டங்களுக்கு செலவிடுதல்.
ஒழுக்கம், நீதி, நேர்மை சார்ந்த கருத்துருக்கள் அடங்கிய தொகுப்பை கல்லூரி படிப்பு வரை கட்டாய பாடமாக்குதல்.
விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த கால்நடைகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்தல்.
லஞ்சமில்லாத, ஊழலற்ற அரசு நிர்வாகத்தை அமைத்தல்.
ஏழை எளியோர், பெண்கள், முதியோர் உட்பட அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்தல்.